விறுவிறுப்பாக படமாகும் ‘#புஷ்பா 2’!! செகன்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு!!
Popular actor who turned as politician called Vijayakanth, has been away from the Read More
Trending
Popular actor who turned as politician called Vijayakanth, has been away from the Read More
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து (செப்டம்பர் 6-ம் தேதி வரை) தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தியேட்டர்களில் நேற்று இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் […]Read More
தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் அதிகரித்தபடி இருந்தது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்து சென்றது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் மே 10-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதி முதல் ஜூன் 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் […]Read More
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த ஆண்டின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது மற்றும் பரிசு பணத்தை சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்க உள்ளார். இந்நிலையில் தஞ்சை ஆண்ட மன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரையை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.Read More
கீழடியில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளி காசு கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை, பண்பாடு குறித்த பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து பண்டைய கால எலும்புகள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்து வந்த நிலையில் தற்போது வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. முன்னதாக தங்க காசு ஒன்று கிடைத்திருந்த நிலையில் தற்போது கீழடி அகழாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ. ஆழத்தில் வெள்ளியிலான […]Read More
இந்நிலையில், கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய முன் வந்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை எடியூரப்பா வழங்க உள்ளார். இதையொட்டி இன்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்புக்கும் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார் எடியூரப்பா. இரண்டு ஆண்டு காலத்தில் தனது அரசு செய்த சாதனைகளை அப்போது அவர் பட்டியலிட்டார். பின்னர் முதல்வர் பதவியில் இருந்து, தான், ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதாவது, 2 […]Read More
தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா ஒட்டிய கடற்பகுதிகளில் நிலவுகிறது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை […]Read More
Thanks for sharing this, you are awesome !